அங்க என்னடா பேச்சு வேண்டிக்கிட்டு கெடக்கு...

 அங்க என்னடா பேச்சு வேண்டிக்கிட்டு கெடக்கு...அம்மூர்கார பய பேச்சு புக்குல அம்ம அவிராமரம் உசுக்கோல பத்தி எழுவிக்கிட்டு இரிக்காய்ன் ...நீயும் வாப்பே....பாசக்காரப் பயலுக அம்மள உட்டுட்டு எழுதமாட்டியான்...( சிங்கமுத்து இஸ்டைல்ல வாசிக்கவும் )..

.
.
.






இப்புடி உசுப்பேத்தி ஒவ்வொருத்தவுகளும் நண்பர்கள்ட்ட சொல்லி வாசிக்க வெச்சு இந்த வாரம் பூராம் ஒரு வித்தியாசமான நூல் கண்டு யாவாரம் தான் ஓடிக்கிட்டு இருக்கு...ஒருத்தர் சொல்றாரு " அடே ஆனா பானா நீ எழுதுனத பாத்து எனக்கு பல்லு போன நேரத்துல பனங்கல்கண்ட வாயில ஊறப்போட்டு முழுங்குன மாறி இனிக்குதுடா....பக்கி பள்ளிக்கொடத்த பத்தி இன்னங்கொஞ்சம் எழுவுடா....நல்லாருப்ப....."
.
.
.இந்தச் சொல் எனக்கு லாஸ்ட் பால் போடுற போது பூஸ்ட் பால் குடிச்சிட்டு சிக்ஸர் அடிச்ச மாதிரி தெம்பு குடுத்துச்சு...
.
.
.இறுக்கமான , எந்திரத்தனமான ( அம்ம பாசையில கால்ல வெண்ணித் தண்ணிய ஊத்திட்டு அலையிறது ) வாழ்க்கைச் சூழலில் மலரும் நினைவுகளால் நாம் மயிலிறகு போல் வருடப்படும் போது அதுவும் இரண்டாம் கருவறையான பள்ளிக்கூடப் பருவத்தை திரும்பி பார்க்கும் போது மனம் சற்று துள்ளிக்குதித்து தூரல் மழையில் சாரல் காற்றுடன் சாத்வீக நடனம் ஆடுவது போல் கிளர்ச்சி அடைவது இயற்கையே....
.
.
.
.
அந்த ஹெச் வடிவ கட்டிடத்தின் அருகில் உள்ள இரண்டு தேனீ பழ ( தேன் பழம் ) மரங்கள் எத்தனையோ மௌனகீதங்களை சுமைதாங்கி போல் உள்வாங்கி வருடா வருடமும் எடை கூடி விடலைப் பூக்களின் போதிமரங்களாக விளங்கியதை நினைக்கும்போது கருவைக்காட்டு சீமையிலும் ஈரம் சோர்ந்த இலக்கியங்கள் தோன்றத்தானே செய்யும் நண்பர்களே...!!!
.
.
.தூக்குச்சட்டியிலே துவையலும் கஞ்சியுமாய் தூக்கக் கலக்கத்தில் பள்ளி வந்த கிராமத்து புள்ளைகளுக்கு ஊனா கடை பருப்பு வடை வெஞ்சனமாய் இருந்து பள்ளிவாசல் தோப்புகளில் நட்பூக்கள் கொஞ்சி விளையாடி ஊட்டி விட்டதை நினைக்கும் போது மனம் சஞ்சலம் அடையும் தானே அன்பர்களே...!!!
.
.
.
.முதுமையில் இளமை அடைய சில காலம் பழமையை அசை போடுவோம்...!!!
புதுமையாய் மனதில் பள்ளியின்பால் படர்ந்திருந்த நினைவுத் தூசிகளைத் தட்டி இனிய இசை பாடுவோம்...!!!
.
.
.அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது.
.
( தொடரும் )
உங்க மைன்ட் வாய்ஸ் ( ஆண்டு விழா நினைவுகள் என்னாச்சு ப்ரோ )
உறுதியாக அடுத்த பதிவில் அபிராமத்தின் வெங்கலக்குரலான் கருணாநிதியின் கானமும் , நத்தத்து இன்னிசை வேந்தன் தெக்கூட்டு புகாரியின் கீதமும் உங்கள் நினைவுப் புதையலாய் இசைக்கும்...!!!
.
.ஒத்தெல்லோ நாடகத்தில் ஒமர் பாருக் ஜமான் அண்ணன் ஓடிவந்து மகிழ்விப்பது நடக்கும்..!!!!

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive