பைபாஸ் பாலமுருகனும் , ஓ.டீ சுல்தானும் -

 பைபாஸ் பாலமுருகனும் , ஓ.டீ சுல்தானும் -

.
மன்னான் மில் மலரும் நினைவுகள் !!!
.



.90 களின் ஆரம்பத்தில் துருப்புச் சீட்டு வெளாடிவிட்டு துண்டுக்கறி சோத்தை நாக்கு தட்டிவிட்டு , புளிச்சார் வாளியில் தொப்புசாவை திளாவிவிட்டு , மகமாயி தேட்ட்ர் மூடிய பின் சிவா தேட்டர் , ராம்குமார் தேட்டர்களில் சேவுசய்ன் சினிமாக்களை மேயவிட்டு , கம்மாக்கரை , கல்ராம் ஊரணியில் கால்களை உலாவிவிட்டு ஒரு பொறுப்பான 90 கிட்ஸ் என பேரெடுத்து வந்த எங்களுக்கு "அடிச்சாம் பாரு அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் " என்ற வடிவேலு வரிகள் போல் வந்தது தான் மன்னான் மில் வேலை..!!!
.
.
.கோப்பரட்டிவ் நெய்னாரப்பா ஊட்டுலதேன் இண்டர்வியூ...கன்சல்டன்ட் ஜீவன் தாஸ் சார் தலைமையில் நடந்தது...எனக்கு டைம் ஆபீஸ் வேலை , என் நண்பர்களுக்கு சில பல வேலை என இண்டர்வியூ பின்னி பெடலெடுத்து முடிந்தது...
.
.
.அப்போ அங்கே எங்களிடம் " ஒங்களுக்கு வேலை ரொம்ப ஈ.சிப்பா... " கீழேயும் ஏ.சி , மேலேயும் ஏ.சி " என்று சொன்னார்கள்...நாங்கள் அங்கே போய் பாத்தவுடன் தான் தெரிஞ்சிச்சு கீழேயும் மேலேயும் ஏ.சி ஆனா நடுவுல ஒரே தூசி...கொய்யாலே பஞ்சு மில்லுல பட்டு மெத்தை போட்டு தூங்கவா மிடியும்...காலைல காதல் பரிசு கமலஹாசன் மாதிரி உள்ளே போய்ட்டு ஊட்டுக்கு திரும்பும் போது 16 வயதினிலே சப்பாணி மாதிரி இழுவையோட வருவோம்...
.
.
ஆனால் அங்கு நாங்கள் பெற்ற அனுபவங்கள் சொல்லி மாளாது...இன்பங்களை அள்ளி மாளாது....
.
.நத்தத்தில் 20 பேருடன் கிளம்பிய சைக்கிள் குழுமம் , அபிராமம் பஸ் ஸ்டாண்டில் 60 பேராக விரிவடைந்து "கிளிங் ...கிளிங் என்ற பெல்லின் ஓசையுடன் சிட்டாய் பறந்து செல்லும்....
.
.ப்ரௌன் கலர் காலருடன் சட்டை , ப்ரௌன் கலர் பேன்ட் போட்டு சும்மா சோலைக்கிளிகளாய் வேலைக்குச் செல்வோம்..
.
.
.பஞ்சு மில்லு வேலய பத்தி கொஞ்சமும் தெரியாத பிஞ்சு பக்கிக எங்களுக்கு வேலை சொல்லிக்குடுக்க ஒரு வாத்தியார வர வெச்சாக...அவரு இருமுனா நாங்க இருமுனோம்..தும்முனா , தும்முனோம்..ஏன்னா எங்களுக்கு மில் வேலய பத்தி ஒரு எளவுக் கூந்தலும் தெரியாது அதேன்...
.
.வாத்தியாருக்கு வடையென்ன..சம்சாவென்ன...குழிப்பணியாரமென்ன...சும்மா குமிச்சுப்பிடுவாய்ங்கே...அவரு தின்டு முடிக்க லொகருக்கு வாங்கு சொல்லிருவாவ....
.
.எல்லாம் வேலை பழகுற வரைக்கிம் தான்...பழவி முடிச்சவொடனே அமைதிப்படை அம்மாவாசை பாணியில் "என்ன மணி..என வாத்தியாரை விளித்தவுடன் "தக்காளி"... ஊட்டிக்கு தனியாத்தேன் போவனும் போல அப்டினு மணிவண்ணன் பாணில பல்பு வாங்கிட்டு பறந்து போய்ட்டார்....
.
.
.இந்த வெண்ணையையும் நம்பி ஒரு பொண்ணையும் கொடுக்க வைத்து அந்த விண்ணையும் தொட வைத்த மன்னான் மண்ணையும் மறக்க முடியுமா..???.
..
.
.ஒட்டுப்பீடிக்கு ஒண்ணார்வா இல்லாம கெடந்த எங்கள 1050 ஓவாயும் , பசீரு மாமு டீயும் வடையும் குடுத்து ஜீரோவா இருந்தவய்ங்கள ஹீரோவா மாத்துனது இந்த மன்னான் மில்தான்...
.
.
.ஏர்வாடி வசீர் மச்சாய்ங்...வந்த வொடனே வைண்டிங் மிசின் கிட்டக்க ஒரு யாசீன் ஓதிட்டுத்தேன் வேலைகள ஆரம்பிப்பாவ....
.
.ஒரு நட்டு திருடுன பையன "இன்னக்கி நட்டை திருடுனவய்ன் நாளக்கி ஸ்பின்னிங் ப்ரேமை திருடமாட்டான்னு என்ன நிச்சயம் அப்டின்ட்டு வேலய விட்டு தூக்கிட்டாக....பாவம்....
.
.அடுத்து ஒழுங்கா போய்க்கிட்டு இருந்த ஒத்த மாட்டு வண்டில அச்சாணி கழன்ட மாதிரி ரெண்டு சம்பவம்...ஒண்ணு தெக்கூட்டு புகாரி மச்சான் கார்டிங் மிசின்ல பிரஷ்ஷை விட்டுட்டு பிடில் வாசிச்சிட்டு இருந்தது...( நல்ல வேளை மச்சானுக்கு ஒண்ணும் ஆவலை ) ...ரெண்டாவது பவர் ஹவுசில் தீ விபத்து நடந்தது...அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் தீங்கில்லை....
.
.
தஞ்சாவூர் குலாம் பாயின் மிலிட்டரி யூனிபார்ம் தோரணை எங்களுக்கு சிரிப்பு செக்யூரிட்டியாகத் தெரிந்தது...டைம் ஆபீஸ் வஹாப் அண்ணனின் ஆப் நைட் , புல் நைட் டூட்டிகளில் கோழித்தூக்கம் காமெடியில் கலந்தது....
.
.
.எல்லாரையும் விட வைண்டிங் மிசினில் அடிக்கடி நூல் அறுந்து போவதை தவிர்க்க அம்ம பாலமுருகன் நூலை பைபாசில் விடும் ஜெர்மன் டெக்னாலஜியை கண்டுபிடித்து பின்னாளில் "பைபாஸ் பாலமுருகன் " என்று அன்போடு இன்றும் அழைக்கப்படுவதும், "ஓ.டீ பாக்க கூப்புடுறாய்ங்கடா..ஒடுங்கடா...ஓடுங்கடா....என்று ஷிப்டு முடிஞ்சவுடன் பின்னங்கால் பொடதில அடிக்க ஓடும் எங்கள் மத்தியில் சளைக்காமல் ஓ.டீ பார்த்து பின்னாளில் " ஓ.டீ சுல்தான் என்று தெம்போடு அழைக்கப்பட்ட மேஸ்திரியையும் மறக்க முடியாது....
.
.
.
.இப்படி தனிதனாக இருந்த என்னை மனிதனாக மாற்றி புனிதனாக மாறு என வாழ்த்தி விடைகொடுத்த மன்னானை ( இறைவன் ) நான் மறவேன்...
.
..
.நிறைய சொல்லலாம்...மக்களின் பொறுமையின் அருமை கருதி வெறுமையுடன் முடிக்கிறேன்..!!!
.
. ( மன்னான் நண்பர்கள் தங்கள் அனுபவங்களை கமெண்ட் பாக்சில் தொடருவார்கள் என்ற நம்பிக்கையில்....!!!!
முன்னாள் டைம் ஆபீஸ் சாகுல் ஹமீது ,
மன்னான் மில் , வீரசோழன் ரோடு , அபிராமம்..
.நீதி : வசந்த காலக் கோலங்கள் !!!
வானில் விழுந்த கோடுகள் !!!
கலைந்திடும் கனவுகள் !!!
கண்ணீர் சிந்தும் நினைவுகள் !!!

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive