ஹைஸ்கூல் கிரவுண்டு புல்லு சீய்ப்பும்

 ஹைஸ்கூல் கிரவுண்டு புல்லு சீய்ப்பும் , ஆண்டி , எஹியா பாய் , நெய்னா முகம்மது அண்ணன்கள் வழங்கிய பானாக்காரமும் ( பானகம் - அம்மளுக்கு அதேன் அப்ப பெப்சி ,கொக்கோக்கோலா )







.
.



.
.
.
நல்லாசிரியர் , நம் தலைமையாசிரியர் காதர்மைதீன் சார் முதல் நாள் பிரேயரில் " நாளைக்கி புல்லுச்சீப்புப்பா...பொம்பள புள்ளைக கூடை , வெளக்கமாறும் , பையங்க கொத்துவானும் , மம்பட்டியும் கொண்டுட்டு பிராக்கு பாக்காம வெள்ளனயே வந்துருங்கப்பா..." என்று அறிவிப்பு செய்ததும் அம்மளுக்கெல்லாம் அப்புடி ஒரு சந்தோசம்...
.
.
.
.
தங்கராசு சாரும் , வேலுச்சாமி சாரும் எஸ்.பி.எல்லும் ( ஸ்கூல் பீப்பிள் லீடர் ) கிரவுண்டுல சுண்ணாம்புக்கோடு போட்டு ஒவ்வொரு வகுப்புக்கும் சுத்தம் செய்ய பிரிச்சு உடுவாக..
.
.
.
வெள்ளைச்சட்டையும் காக்கி டவுசரும் அணிந்த ஆம்பள பய புள்ளைக முன்னே புல்ல சீச்சுக்கிட்டே போகனும்...பின்னாலே மஞ்சள் தாவணியும் , பச்சைப்பாவாடையும் அணிந்த பெண் பிள்ளைகள் வெளக்கமாறால கூட்டி அள்ளி கூடையிலே போட்டு ஒரு எடத்துல குமிக்கனும்...இதை தூரத்து மாடிவீடுகளில் இருந்து பார்த்தால் பச்சைப்பூவனத்தில் மஞ்சள் மலர்களும் , வெள்ளைப் பூக்களும் நகர்ந்து செல்வது போல் காட்சி அளிக்கும்.
.
.
.
.
எங்களப் போல உள்ள நெளிப்பு இண்டியா லிமிட்டெட் பயபுள்ளைக புல்லை சீய்க்கிர மாதிரி பாவ்லா காமிச்சிக்கிட்டு கிராமத்து பயலுக ( அவுகதேய்ன் தீயா வேல செய்வாக ) பக்கத்துல பம்மிக்கிட்டே படம் காம்பிப்பம்....அப்ப மைக்குல காதர் மைதீன் சார் பேக்கி பேண்ட்டை தூக்கி விட்டுட்டு " மாணவ மாணவியரே தற்போது ஒரு இடைவேளை. எய்யா பாய் , ஆன்டிட்ட பொம்பள புள்ளைகளும் , நெய்னாம்து , மழைமேகுட்ட ஆம்பள பயளுகளும் பானாக்காரம் ( பானகம் ) வாங்கிக் குடிங்கப்பா " அப்டின்னு சொன்னதும் செம்புச்சட்டிக்கு பக்கத்துல மொத ஆளா அம்மதேன் நிப்பம் ( அம்ம வளப்பு அப்படி )....
.
.
.



பிள்ளய பூராம் வேவாத வெயிலுல அலைஞ்சு திரிஞ்சு கிரவுண்டோட அலக்குடுத்துட்டு தண்ணித் தாவத்துல வந்தம்னா ஒரு ஆறுதலா இருப்பது தான் இந்த பானாக்காரம் ( பானகம் ).. இது புளிப்பு கனக்கட்டாவும் , இனிப்பு கனக்கட்டாவும் இருக்கும்..அம்ம அதக்குடிக்க சட்டையோட ஒரு தடவயும் , பனியனோட ஒரு தடவயும் ( ஆளு அடையாளம் தெரியாதாம்..) லைன்ல நிப்பம்..அதைக் கவனிச்ச ஒடையநாதபுரத்து முத்துவேலு அண்ணய்ன் அம்மல வேலுச்சாமி சார்ட்ட போட்டு உட்டுரும்...சாரு எங்கள தூக்கிப் போட்டு மிதிச்சதும் முத்து வேல்ண்ணே அதுக்கு வாங்குன பானாக்காரத்த எங்கள்ட்ட குடுத்து குடிக்க வெச்சு கண்ணு கலங்க வெக்கிம்...
.
.
.
.
ஐஸ்கூலு கிரவுண்டு பூராம் சுத்த பத்தமா ஆன பின்னாடி அம்புட்டு பேரும் வேப்ப மரத்தடியில் அசம்பிள் ஆவோம்...அப்ப அதே மைக்குல " எப்பா...அம்புட்டு பேரும் நல்லா வேல செய்ஞ்சு கிரவுண்ட நல்லாக்கிட்டீங்க...தேங்க்ஸ்...ஒங்களுக்கு வியாழன் , வெள்ளி , சனி மூணு நாளு லீவு...ஞாயத்து கெளம பள்ளிக்கொடம் தெறக்கும் " அப்டின்ட்டு சொன்ன ஒடனே வீ...வீன்டு விசிலடிச்சிக்கிட்டு சிட்டாப் பறந்து போவோம் அவுக அவுக ஊடுகளுக்கு.....
..
இன்றும் இதை நினைக்கும் போது பள்ளிப்பருவம் போல் ஒரு செல்லப்பருவம் இனி நம் வாழ்நாளில் .எங்கே காண்போம் என்று ஏங்கியவாறு தூங்கச் செல்கிறேன்....கனவிலாவது புல்லுச்சீய்ச்சு மனதைத் தேற்றுகிறேன்...
அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது..
.
.ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே !!
காவேரி ஊற்றாகவே !!காற்றோடு காற்றாகவே !!
.
.
நீதி : குரங்குகள் போலே மரங்களின் மேலே
தாவித்திரிந்தோமே....!!!
குயில்களைப்போலே இரவும் பகலும்
கூவித்திருந்தோமே...!!!
வரவில்லாமல் செலவுகள் செய்து
வாழ்ந்திருந்தோமே
நாமே !!! பசுமை நிறைந்த நினைவுகளே !!!
பாடித்திரிந்த பறவைகளே..!!
பழகிக் களித்த தோழர்களே !!! பறந்து
செல்கின்றோம்..நாம் பிரிந்து
செல்கின்றோம்..!!!
( தொடரும் )
.
இனி.வருவது.....இலக்கிய மன்ற ஆண்டு விழா , விளையாட்டு ஆண்டு விழாக்களில் நம் சந்திர சேகர் சார் , யூசுப் சார் ரன்னிங் கமாண்டேட்டரி மற்றும் சுவராசிய சம்பவங்கள் அடுத்த பதிவில் காண்போம் .........

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive