வசந்த காலக் கோலங்கள் !! வானில் விழுந்த கோடுகள் !

வசந்த காலக் கோலங்கள் !!

வானில் விழுந்த கோடுகள் !
கலைந்திடும் கனவுகள் !!
கண்ணீர் சிந்தும் நினைவுகள் !!



ஆங்கிலத்தில் பேசவேண்டும் , எழுத வேண்டும் என வித்திட்டவர் என் ஆசான் யூசுப் சார் ( நாங்க சுபாரி பாக்கு திங்கும் போதே சபாரியில் கலக்கியவர் ) ஆரம்பத்துல அவரு இங்கிலிஷ் பாடம் நடத்தும் போது எங்களுக்கு ஊமைப்படம் பாக்குற பீலிங்..நடத்தும் போது அவரு சிரிச்சா நாங்க சிரிப்போம் ( சின்னத்தம்பியில் கவுண்டமணி...சூப்பரப்பு மாதிரி )
அப்புறம் எங்க கெப்பாக்குட்டிய ( கெப்பாசிட்டின்டு சொல்ல வந்தம் ) பாத்திட்டு அவரோட ஸ்டைல மாத்தி பட்டிக்காட்டுல பச்சப் புள்ளைகளுக்கு பருப்புக் கடைஞ்ச ரசம் ஊட்டுன மாதிரி பதமா ஊட்டினார் அதுவும் அவர் இன்டராக்சன் செம்மையா இருக்கும்.. பசங்கள ஆம்பள , பொம்பளன்டு வித்தியாசம்லாம் பாக்கமாட்டார்..
ஒழுங்கா பதில் சொல்லாத பொம்பளப் புள்ளய பாத்து " ஒன்னயல்லாம் கெட்டிக்குடுக்காம ஏய்ன் உசுர வாங்க இய்ங்க அனுப்புனானாக்கும் ஒங்கொப்பய்ன் ...சாய்ங்காலம் சம்சா வாங்க வருவான்ல அப்ப அவன்ட்ட வச்சிக்கிறேன்..மண்டைகளயும் ஆளுகளயும் பாரு என்பார்.
அதுவே ஆம்பள பையனா இருந்தா " டுட்டோரியல் காசு குடுத்துட்டியா ? பையன் 1 குடுத்துட்டேன் சார்...அப்ப நிச்சிய பாஸ்...நீ குடுத்துட்டயா ? பையன் 2 : "இல்ல சார்" ஒடனே அவரு " குரூப் போட்டோ எடுத்துக்கங்கடா...அக்டோபருக்கு ஒதவும் ( பெய்ல் கேசு ) என நக்கலடிப்பார்..
நல்லாப்படிக்கிற நாலு பேருல நண்பர்கள் ஆனந்து மற்றும் சேக் முகம்மது ( அம்ம வக்கீல் சர்புதீன் மச்சான்) ரெண்டு பேரு மட்டும் இங்கிலிபீசுல பின்னிப் பெடலெடுப்பாக...எஸ்ஸே மற்றும் பாராகிராப் தானாக சிந்தித்து அவர்களாக சுயமாக எழுதுவார்கள் ( நாங்க ஜான்சன் வென்ட் டு பெம்ப்ரோக் காலேஜ்...ஜான்சன் வென்ட் டு பெம்ப்ரோக் காலேஜ்...என்று மாங்கு மாங்குன்டு நெஞ்ச தட்டிக்கிட்டு மொட்ட மனப்பாடம் போடுவோம்.)
அந்த ரெண்டு பேருக்கும் பரிட்சை பேப்பரு கொடுக்கும் போது ஈசுப் சார் அவர்களிடம் " ம்ம்ம்ம்..சொந்த நட...இப்புடி எல்லாப்பேரும் சொந்த நடயா எழுதுனா நான் ஆண்டிய தாங்கி தருவுச்சு சைக்குலோஸ்ட் பண்ணுன எஸ்ஸே பேப்பரு எல்லாம் வேஸ்ட்டா போய்ருமேடா...அப்டிம்பார்...
ஒரு நாள் வகுப்பில் மதர் டங்க் இதுக்கு அர்த்தம் சொல்லுங்கடா ...ஆனந்து சேக்கை தவிர்த்து என்றார்..நான் பகுமானமா "அம்மா நாக்கு சார் " எனச்சொன்னேன்..அதுக்கு அவர் " டே ஆனா பானா நாங்க கொஞ்ச நஞ்ச இங்குலீச டிஸ்னரிய வெச்சுக்குட்டு ஒப்பேத்திக்கிட்டு இருக்கம் அதுக்கு வேட்டு வெச்சிறாத...நீ நொம்மா மாதிரி நல்லாப் படிப்பேன்னு பாத்தேன் கடேசில ங்கொப்பன மாதிரி வெளாடிட்டு இருக்க " என்றார்...எனக்கு நான் சொன்ன அர்த்தம் சரியா தவறான்னு எளையாங்குடில தேன் தெரிஞ்சுச்சு..
எளையான்குடி காலேசுல நான், மாப்புள சமாலு ( இப்ப துணை தாசில் தாரு ) பரமசிவம் அப்டிங்குற பையன் ரூம்ப பூட்டிக்கிட்டு இங்கிலீசு பேசுவோம்..தப்போ ரைட்டோ பேசனும் ...சிரிக்கக்கூடாது..இப்படி பேசும்போது தான் மறுபடியும் அந்த மதர் டங்கு மாதிரி நெறைய வார்த்தைகள பேசி தட்டுத் தடுமாறி இப்ப சூரியனா ஜொலிக்காவிட்டாலும் சந்திரனா மின்னுகிறோம் என்பதில் ஐயமில்லை..
ஒளிப்பதிவாளர் மலைமேகுவுடன் எகியா பாய் சொந்த பந்தம்.. ...

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive