ஒசம்பாத்து நன்னி சுருக்கு பை..

 ஒசம்பாத்து நன்னி பற்றிய முந்தைய பதிவில் சுருக்கு பை மிஸ்ஸிங் என்று அம்ம மாப்புளைக சொன்னாவ...

.
.
.
ஆன்டாக்கா ...சென்டிமென்ட் பதிவில் காமெடிய புகுத்துனா ஊசிப்போன ஆணத்துல உளுந்த வடைய முக்கி சாப்புடற மாறி இருக்குன்டு அம்ம அடி மனசு சொல்லுச்சு..அதேன் அத தனி பதிவா போடுவன்னு இப்ப போடுறம்...






.
.
.
இன்னக்கி கம்பூட்டரு காலத்துல கன்னில இருந்து நன்னி மொதக்கொண்டு ஹேண்ட் பேக்கை பகுமானமா தோள்ல தொங்க உட்டுட்டு திரியுதுக...ஆனா அதுக்கு ரோலு மாடலு ஆருன்டு பாத்தாமுன்னா அம்ம அந்த காலத்து பர்மா ரிட்டன் பாசக்கார நன்னிகதேன்...அவுக ஹேண்டு பேக்குதேன் இந்த சுருக்கு பைய்யி...
.
.
.
அல்லல்லா....அது உள்ளக்க அம்புட்டு சரக்கு வெச்சிருக்கும்க அயிசா நன்னிலே ஆரம்பிச்சு உம்ம கொலுசு நன்னி வெரைக்கிம்...ரவுமானே...மண்டேடி மருந்து , கோடாலி சாப்பு , விசுக்கு ( விக்குஸ்தேன் ) , கொஞ்சக்கான்டு ரூவா நோட்டுக , கொல்லயத்த சில்ர காசுக ,மைனாண்டவுகளுக்கும், நாவூராண்டவுகளுக்கும் தெக்கத்தி கந்திரி அன்னக்கி உண்டியல்ல போடனுன்டு நேந்துக்க்கிட்டு முடிஞ்சு வெச்ச ஒத்தப்படை காசு முடிச்சுக ( 1 , 11 , 21 , 51 இப்டி போட்டாத்தேன் ஆணடவுக மாருக உண்டியல் பேங்குல செல்லும் ) , மிடிஞ்சா ஊறுவா பாக்கெட்டுன்டு ஊருப்பட்ட ஐட்டங்கள சொமதாங்கி மாறி தாங்கிக்குட்டு ஒய்யாரமா ஒசம்பாத்து நன்னியின் இடுப்புல ஊஞ்சலாடும்க அந்த சுருக்கு பை..
.
.
.
.
அந்த சுருக்கு பையிக்கி தொணப் பொண்னு மாறி சாவிக்கொத்துக சல சலன்டு நன்னியின் வலது இடுப்புல வக்கணையா நாட்டியமாடும் ..
.
.
அடுத்து வெத்தலை பெட்டி..இதுல கொளுந்து வெத்தல , போயலக்கட்டை,சுண்ணாம்பு , சீவல் பாக்கு , கொட்டைப் பாக்கு... பாக்க ஒடய்க்க ஒரு இடுக்கி மாரி பாக்குவெட்டி ,வெத்தல இடிக்க கொல்ல ஒரு ஏத்தணமும் ஒலக்கையும், பர்மா ரிட்டன் கெய்விகளுக்கு ரெண்டு சுருட்டு பண்டல், வத்திப்பட்டி
.
.
.
இம்புட்டு சமாச்சாரங்கள் ரெடியா இருந்தாத்தேன் நன்னிகளுக்கு ரொட்டீனு ஒர்க் ஓடும்..இதுல ஏதாச்சும் சொதப்புனா சிஸ்டம் படுத்துரும்..அத சரியா கொண்டு போவ தோழி மாருக ஒதவி ஒத்தாச செய்வாக.
.
.
செம்புச்சட்டி சோறு எறங்குனவன்னே நன்னிக்கி மட்டும் தனி கறியா ரெண்டு துண்டு , பிரியக்கடை பண்ணாமல் கறிச்சாறுல ரெண்டு கிண்ணி , பெரியாளு தட்டுல குமிச்சு வெச்ச மஞ்ச சோறு ,புளிச்சாறுல பூசணிக்காவும் , தொப்புசாவும் ரெவெண்டு வேணும்...
.
.
இதுல ஏதாச்சும் மின்ன பின்ன ஆனா ஒசம்பாத்து நன்னி கடுப்புல ஒரு சுருட்டை எடுத்து பத்த வெச்சி சுத்தி சுத்தி இழுக்கும்..அப்ப ஆச வாச படுத்துனாத்தேன் நல்லது..இல்லன்டாக்கா நன்னாவுக்கு நல்லா நலுங்கு எடுத்து உட்டுரும்..
.
.
.
நீதி : பர்மா ரிட்டன் சுருட்டு நன்னிகளின் புருசுமார்கள் ( புருசனச்சொன்னம் ) தான் வேல பாத்த கம்பேனி மொல்லாளிட்ட கெஞ்சி கெதறி நெறைய ஓவர்டைம் வேல பாத்தாகன்டு அம்ம துப்பறியும் துல்கிப்லி மச்சாய்ன் சொல்றாவ !!! ( பண்டல் பண்டலா ஊதித்தள்ளுறாளுவல்ல இந்த கெய்விக அதேன்....என்னத்த சொல்ல,,,,)
.
.
.
.
.
.உப நீதி : மேலே கண்ட போஸ்ட்டை படித்தவுடன் அவுக அவுக நன்னிகளிடம் சுருக்குப்பை , சுருட்டு , வெத்தலை பாக்கு , போயலை பற்றி சுவராஸ்யமான அனுபவங்களை கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் கவ்வக் குடுத்து எழுதவும்..நினைவுகளை அசை போடுங்கள்...குமிச்சிப் புடுவம் குமிச்சி....

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive