சங்கு வாப்பா ஒரு சகாப்தம் !!!

 சங்கு வாப்பா ஒரு சகாப்தம் !!!



தென் கோடியில் முகவரியில்லாமல் இருந்த நத்தம் அபிராமம் எனும் குக்கிராமத்தில் பிறந்து பர்மிய தேசத்தில் வீறு நடை பயின்று சாரட்டு வண்டியில் சாத்வீகமாய் பவனி வந்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த.தலைப்பாகை நாயகன் துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் மற்றும் மீசைக்கார வித்தகன் விஜயன் அப்துல் ரகிமான் அம்பலம் ஆகியோர் முகவரிக்கே முகவரி எங்கள் நத்தம் அபிராமம் என மூலை முடுக்கெங்கும் முரசறைந்து சொன்ன சரித்திரங்கள் முந்தைய பதிவுகளில் கண்டு கண்மலர்ந்த நமக்கு அதே பர்மிய மண்ணில் அகல் விளக்காய் ஜொலித்து பின்னாளில் இந்திய துணைக்கண்டத்தில் தங்க நிலவாய் பிரகாசித்த சங்கு வாப்பா எனும் சங்கு முகம்மது அபுபக்கர் பெருந்தகை..வரலாறு மனத்துக்கு இதம் தரும் என்பதில் ஐயமில்லை....
.
.
அன்னவர் அவர்கள் கைலிகளின் சக்கரவர்த்தி என்று சாரம் ( கைலி ) உடுத்தும் சான்றோர் அனைவருக்கும் தெரியும். ஆனால் இலக்கியத்தில் கலக்கிய இமயம் என்று 1943 ஆம் ஆண்டு வெளிவந்த நத்தம் இளைஞர்கள் நடத்திய ஒரு மன்றத்தின் 2 ஆம் ஆண்டு நிறைவு மலர் மஞ்சரி ஒன்றினைக் காணக்கிடைத்து களிப்படைந்து வியந்தேன் .....( ஆதாரம் : இணைப்பில் அந்த மலர் மஞ்சரி )
.
.
.அதில் சங்கு வாப்பா அவர்கள் " அறிவு விளக்கத்தின் மூலம் சாந்தி " என்ற கட்டுரையினைப் படைத்திருக்கிறார்கள்...ஆன்மீகத்திலோ அறிவியலிலோ நமக்கு ஏற்படும் ஐயங்களுக்கு அறிவு விளக்கங்கள் மூலமே அமைதி கொண்டு வர இயலும் என்பதை ஆத்மார்த்த வெளிப்பாடாக அந்நூலில் சிற்பியாக செதுக்கி இருக்கிறார்கள்..
.
.
.அன்றைய நத்தத்து வாசிகளுக்கு "சங்கு கிணறு " தன் சுனை நீரை அமுதமாய் வாரி வழங்கியது போல் அறிவுக் கடலில் சங்கமிக்கும் சான்றோர்க்கு பொங்கும் நீராய் , பொலிவாய் , புத்தம் புது நதியின் துள்ளலாய் தன் இலக்கிய உணர்வால் பூரிப்பு ஊட்டிய சங்கு வாப்பா ஒரு சகாப்தமே !!!!!
.
.
.அந்த மலர் மஞ்சரியின் பயன் படுத்தப்பட்ட அந்தக்கால வார்த்தைகளை வாசிக்கும்போது உள்ளம் வெல்லம் தின்ற தித்திப்பில் மெல்ல மெல்ல திளைக்கிறது..அள்ள அள்ள அமுதம் பருகும் ஆனந்தத்தில் மூழ்கி களைக்கிறது...
.
.உதாரணத்துக்கு சில....."யுவர் மன்றம் " , "பராக்கிரமம் , " பந்து மித்திரர் , " இம்மட்டோடு ".......ஆஹா...ஆஹா...!!! அருமை !!!
.
.
.அந்த மஞ்சரியின் கட்டுரைகளோ தசம் ....!!!.அதைப் படிக்கும்போது நம் மனமோ வானம் வசம்...!!!
..
.
."நற்போதனை ( " அறிவு விளக்கத்தின் மூலம் சாந்தி " ) " என்ற தலைப்பில் சங்கு வாப்பாவும் , "பலே ஸி.ஐ.டி " என்ற தலைப்பில் பி.எம்.ஓ ஹமீது என்பாரும் , " இஸ்லாமிய அரசியல் " என்ற தலைப்புடன் துபாஷ் ரஸாக் ( பின்னாளில் டி.எஸ்.பி ) அவர்களும் , " கருணையின் சிகரம் " என்ற தலைப்பில் அ.சே.முத்து முகம்மது அவர்களும் , " தமிழ்த் தாயைத் தாங்குக " என்ற தலைப்பில் துபாஷ் து.கா.யா.அப்துல் ஹமீது ( பின்னாளில் நத்தம் போஸ்ட் மாஸ்டர் ) அவர்களூம் ஐம்பொன்னை உருக்கி அழகு ஆபரணங்கள் படைத்துள்ளனர்.
.
.அடுத்து ஆங்கிலத்தில்
முதல் கட்டுரை எழுதிய திருவாளர் ஷேக் அலி பற்றி தெரிந்தவர்கள் கமெண்டில் எழுதவும்.
.
.2 வது கட்டுரை எழுதியது நூர்தீன் மதாறுப்புலவரின் பேரன் நூர்தீன் ஷேக் பெருந்தகை. (துபாஷ் காதிறு சாகிப்பின் மகள் வழிப்பேரனும் கூட..)
.
.3 வது கட்டுரை எழுதியது சங்கு வாப்பாவின் தங்க பாப்பா சங்கு செய்யது வாப்பா.
.
.4 வது கட்டுரை எழுதியது "தாவுது மார்க் ஏ.ஏ.ஷேக் பரீது என்னும் சொல்லாளர்..
.
.5 வது கட்டுரையை எழுதியது விஜயன் கபூர் அப்பா....
.
.( ஆதாரம் மலர் மஞ்சரி...)
.
.நத்தம் அபிராமத்தின் இலக்கிய ஆன்மீகக் கடலில் கிடைத்த முத்துக்கள் ஏராளம் ஏராளம்...பிரிதொரு நாளில் அவர்களையும் அறிவோம்.இன்ஷா அல்லாஹ்.!!.
.
.
பின் குறிப்பு : 77 வருடத்திற்கு முந்தைய இந்த மலர் மஞ்சரி அப்பளம் போல் நொறுங்கி விடாமல் தங்களது தொழில் நுட்ப உதவியால் அழியாக் கோப்பாக மாற்றித் தந்த தம்பிகள் எஸ். செய்யது முஸ்தபா மற்றும் வி.செ.இ. செய்யது முஹம்மது உவைஸ் ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை வாரி இறைக்கின்றேன் வாச மலராய் வீசி மணம் பரப்ப வாகாய் வாழ்த்துகிறேன்..
.
..அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது..
.
.
..பின் குறிப்பு : இது போன்ற காலத்தால் அழியாத வரலாறுகள் உங்கள் அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தால் தட்டி எழுப்பி இந்த எளியவனிடம் தாருங்கள்..அதை நான் பன்னூறு பேருக்குச் சென்றடைய பதிவிடுகிறேன்..நன்றி..
.
.அ.ப.சாகுல் ஹமீது..

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive