கனிவுடன் கண்டிப்பு ஆசான் காதர் மைதீன் சார் !!!

 கனிவுடன் கண்டிப்பு ஆசான் காதர் மைதீன் சார் !!!

பணிவுடன் பகர்வேன்..யூ ஆர் மை தீம் சார் !!!
துணிவுடன் சொல்வேன் யூ ஆர் மை ட்ரீம் சார் !!!
.
.
.



பங்ச்சுவாலிட்டி , ஜென்டில்மேன் , சின்சியாரிட்டி போன்ற ஆங்கில வார்த்தைகளை டிக்சனரியில் பார்ப்பதை விட நம் நல்லாசிரியர் தலைமை ஆசிரியர் காதர்மைதீன் சாரை இரு முறை கற்பனை செய்தால் அவற்றின் பொருள் புரியும்..
.
.
.நபி மொழியில் ஒன்றான " என் மகள் பாத்திமா திருடினால் கூட அவர் கையை வெட்டுவேன் " என்பதின் முழுப்பொருளை காதர் மைதீன் சார் அன்று பள்ளியில் தன் மகன் பிலால் செய்த சிறு பிழைக்காக பிரம்பு எடுத்து பின்னும்போது கண்டு உணர்ந்து கொண்டேன்..( வலியை எண்ணி அன்றிரவு அனைவரும் கண்ணயர்ந்த பின் கண்டிப்பாக அழுதிருப்பார்...பாச மகனல்லவா.. )
.
.
.
அந்த தலைமையாசிரியருக்கு ஒரு உன்னத உதவித் தலைமை ஆசிரியராக அமைந்தவர்தான் என் இனிய ஆசிரியர் அனந்தகிருஷ்ணன் சார்...தேனுடன் கலந்த பலாவின் தித்திப்பாய் எங்கள் உள்ளம் நிறைந்த பண்பாளர். அனைவரையும் " ராஜா......என்ற விளிப்புடன் நேர் மறையான வார்த்தைகளால் வழி நடத்திய வாத்தியார் அய்யா.......
.
.
.
பத்திரிக்கை குடுக்காமலேயே ( ஸ்லாங்க மாத்துவம்ல ) டெவுலி ( டெய்லிதேன் ) காது குத்து நடத்துவாக எங்க திருவேங்கடம் சார்..ஆத்தீ...என்னா வலி..அப்புறம் எலவச எணைப்பா காச்சுப்போன கையால தொப்புன்டு போடுவாரு பாருங்க...விண்ணு விண்ணுங்கும்.....சந்திரசேகரன் சார் வகுப்புக்கு வந்தவொன்ன சப்பு சப்புன்டு அம்புட்டு பேரையும் சைட்மேனிக்கு இறுக்கிட்டு ஒக்காரம்போது "சார் ஒண்ணுமே செய்லியே ஏஞ்சார் அடுச்சிய..என்போம்..எப்புடியும் மூத்தவ தப்பு பண்ணப்போற....அதுக்குத்தேன் அட்வான்ஸ் என்பார்...
.
.
திருவேங்கடம் சார் ,.மாரிமுத்துசார் ,பாலகுருசாமி சார் , ஜெய்ராம் சார், இதிரீஸ் சார் , ஈசுப் சார் , சேக் சார் ,வேலுச்சாமி சார் ,துரைச்சாமி சார் ,ஈடித் டீச்சர் , மங்களம் டீச்சர் ,அயிசா மரியம் டீச்சர் , யாஸ்மீன் டீச்சர் இவுக பூராம் அம்மளுக்கு ஹார்டுவேர் மாதிரி ( உரிச்சு உப்ப தடவுறவுக )
.
.
.திவான் சார் ( கீரை...கீரை...கீரக்காரி ஒழுங்காப்படிம்பார் ) ஹவுஸ் சார் "ம்ம்....ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் ( இதிலே அனைத்தும் புரிய முடியும்..) சுல்தான் பாஷா சார் , ஜின்னா சார் ,பசீர் சார் , காளிமுத்து சார் , தங்கராஜ் சார் , அய்யூம் சார் , கிருஷ்ணவேணி டீச்சர் போன்ற இவுக பூராம் அம்மளுக்கு சாப்ட்வேர் மாதிரி ( அடிச்சாலும் வலிக்காது )
.
.சாப்ட்வேர்லயும் , ஹார்டுவேர்லயும் விடுபட்டவுகள ..என்னய ஒங்க சினேக கூட்டாளியா நெனச்சு கமெண்ட்ல எழுதுங்க....பிளீச்சு....(பிளீஸ்தேன் ).
.
.
.ஆனால் அவர்கள் அன்று அடிக்கும்போது கைகள் காய்த்து இருந்ததால் தான் இன்று நாங்கள் வாழ்க்கையில் பூத்துக் குலுங்குகின்றோம் கனிதரும் மரங்களாய்....என்பது நிதர்சனம்..
.
.
.சாக்பீசில் கொஞ்சம் கனிவும் , கண்டிப்பும் , ஈரமும் , வீரமும் , உவகையும் , உண்மையும் , அன்பும் கலந்து எழுதினார்கள்..
.
அன்று பிரம்பு தந்த வலியை சிற்பியின் கையில் உள்ள உளியின் ஒலியாய் இன்று உணர்கிறோம்..அதனால் தான் ஒளியாய் ஒளிர்கிறோம்..மிடுக்காய் மிளிர்கிறோம்...
.
.
நீதி : நாம் இப்படி இமயத்தைத் தொடுவதற்கு ஏணிப்படியாய் இருந்தவர்கள் நம் ஆசிரியர்கள்...நாம் .மரணத்தைத் தொடும் வரை நினைவு கூர்வோம் அவர்தம் சந்ததிகள் குறைவிலா நிறை வாழ்வு வாழ வேண்டுவோம்...இறைவனை....வாழ்க...வாழ்க...
.
.
.
.
நினைவுக்கு வந்தது :..
..
.
.அன்று மாணவர்கள் பிரியும் போது அனைவரும் பாடும் பாடலாக "பசுமை நிறைந்த நினைவுகளே..." பாடல் இருந்தது...நான் எஸ்.பி.ஜி மேலக்கொடுமலூரில் ஆசிரியர் பயிற்சி பயிலும் போது மாணவர்கள் விடைபெறும் போது ஒரு புதிய பாடல் பாட வேண்டும் என்று நினைத்து எழுதிய பாடல் கீழே...(அன்று எழுதியது முன்ன பின்ன இருந்தால் மன்னிக்கவும் )
.
..
.
.படம் : மூன்றாம் பிறை
பாடல் மெட்டு : கண்ணே..கலைமானே....
.
.
.
.கண்கள் கலங்கிடுதே
இன்று உமை நான் பிரிவதை எண்ணி எண்ணி
அன்பு மலர் கொஞ்சும் நெஞ்சமே..
அண்ணன் தங்கை பாசம் மிஞ்சுமே..
ஆரிராரோ...ஓராரிரோ...ஆரிராரோ...ஓராரிரோ...
( .கண்கள் கலங்கிடுதே )
.
.
.
வானம்பாடி பறவைகள் போலே
கானம்பாடி களித்திருந்தோமே
உலகே எதுவென்று
இந்நாளில் அழகாய் அறிந்தோமே
ஏனோ ஏதோ சதி செய்தது இன்றே உமை நான் பிரிகின்றது
( .கண்கள் கலங்கிடுதே )
.
.
கல்வியில் விதையாய் விதைத்திருந்தோமே
குருவெனும் நீரால் செழித்தெழுந்தோமே
இன்றோ பயிரானோம்
என்னாளும் குருவை மறவோமே..
ஏனோ ஏதோ சதி செய்தது இன்றே உமை நான் பிரிகின்றது
( .கண்கள் கலங்கிடுதே )
..
.
.வாழ்க்கைப் பாடம் மனதினில் ஓடும்
வருவதை எண்ணி உளம் தினம் பாடும்
உயிராய்க் கலந்தோமே
இன்னாளில் ஒளியாய் ஒளிர்ந்தோமே
ஏனோ ஏதோ சதி செய்தது இன்றே உமை நான் பிரிகின்றது
( .கண்கள் கலங்கிடுதே )
.
.
.( தொடரும் ....)
.
.
ஆண்டு விழா நினைவுகள் பிரிதொரு நாளில்........
.
.அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது..

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive