ஒசம்பாத்திலக்கணம்..

 ஒசம்பாத்திலக்கணம்..




ஐஸ்கோல்ல படிக்கும்போது அய்யூம் சார் இலக்கணம் நடத்தும்போது கொழுப்பெடுத்து போயி கொல்ல வாசல்ல ஒக்காந்து இருந்ததோட கசுட்டம் காலக்கெரகம் காலேசுலயும் , வாத்தியாரு ட்ரெயினிங்குலயும் ரெம்ப செரமமா போச்சு..பெறவு தத்திப்பத்தி கத்துக்குட்டு இப்ப காலத்த ஓட்டுறம்...
.
.
அந்தவகையில் அம்ம ஒசம்பாத்து நன்னியோட சொல் , சொற்கள் இலக்கண வரம்பிற்கு உட்பட்டு வருகிறதா இல்ல அசய்ன் இழு ஒசய்ன் தள்ளுன்டு ஒருச்சாச்சுகிட்டு போவுதா என்று மகரித்தேரம் ஒக்காந்து ஓசனை பண்ணிப்பார்த்தேன்.. என்ன ஒரு ஆச்சரியம் ..அனைத்தும் இலக்கண நியதிக்கு உட்பட்டு வருகிறது,,
.
.
அதை வைத்து ஒரு இலக்கணக்குறிப்பு பாடம் படிப்போம்..
.
.
பண்புத்தொகை
.
ஒரு பண்பைக் குறிப்பது பண்புத்தொகை என்று பெயர்
.
உண்மையான எ.கா : பசுங்கதிர்
.
ஒசம்பாத்து எ.கா : கருவாப்பக்கி
.
.
எண்ணும்மை
.
கொடுக்கப் பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்
.
.
உண்மையான எ.கா 1: வாயிலும் மாளிகையும்
.
உண்மையான எ.கா 2: வையகமும் வானகமும்
.
ஒசம்பாத்து எ.கா 1 : அசனும் ஒசனும்
.
ஒசம்பாத்து எ.கா 2 : பூத்தானமும் புதுப்பவுசியும்
.
.
வினைத்தொகை
.
.
வினைத்தொகை ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல் ஆகும்
.
.
உண்மையான எ.கா 1: அலைகடல்
.
உண்மையான எ.கா 2: தொங்குதோட்டம்
.
ஒசம்பாத்து எ.கா1 : நெற பொறை
.
ஒசம்பாத்து எ.கா 2 : ஓடுகாலி
.
.
.
அடுக்குத்தொடர்
.
அடுக்குத்தொடர் ஒரு சொல் இரு முறை வந்து பிரித்துப் பார்க்கும்போது பொருள் தருமாயின் அது அடுக்குத்தொடராகும்
.
உண்மையான எ.கா : இனிதினிது
.
ஒசம்பாத்து எ.கா : அல்லால்லா
.
தொழிற்பெயர்
.
செயல்பாட்டை உணர்த்தும் பெயரைத் தொழிற்பெயர் என்கிறோம்.
.
உண்மையான எ.கா : தூக்கம்
.
ஒசம்பாத்து எ.கா : மவுத்து
.
.
உம்மைத்தொகை
.
"உம்:" உருபு இடையிலோ , கடையிலோ மறைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்வது உம்மைத்தொகை எனப்படும்.
.
உண்மையான எ.கா : இரவு பகல்
.
ஒசம்பாத்து எ.கா : லாவுச மாவுச
.
.
பெயரெச்சம்
.
பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்
.
உண்மையான எ.கா : கொழுத்த புகழ்
.
.
ஒசம்பாத்து எ.கா : ஊருப்பட்ட சங்கதி
.
.
.
..
நீதி : இந்த பதிவைப் படிக்கும் போது கொல்லை வாசலையும் தெருவாசலையும் நாறாங்கி போட்டு பூட்டிட்டு படிக்கவும் ( ரெண்டு வாசலிலும் ரெண்டு நன்னிகளை கங்குல காச்சுன கருதுக்கம்பியுடன் நிற்க வைக்கவும் ) உட்டா சிட்டா பறந்துருங்க பக்கிக...என்னா நாஞ்சொல்றது !!!

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive