உலக நண்பர்கள் தினம் !!!

 உலக நண்பர்கள் தினம் !!!








சில விசயங்களை தாய் தந்தையுடன் பகிர இயலாது...உறவினர்களிடம் கூற முடியாது..ஏன் பிடித்த ஆசிரியர்களிடம் கூட சொல்ல மனம் வராது.....
.
.
.
ஆனால் நல்ல நண்பனிடம் அவன் கையைப் பிடித்துக்கொண்டு கொட்டித்தீர்த்து விடுவோம்...உண்மைதானே...!!!!
.
.
.
என் பால்ய வயது முதல் இன்றும் தொடரும் பல நட்பு வட்டங்கள் மிகப்பெரிது...அந்த வட்டத்தின் சுற்றளவு 2 பை ஆர் பார்முலா மூலம் அளந்தால் கால்வாசி மட்டுமே அளக்க முடியும்...(கணக்கு வாத்தியார் சாவுல் வாப்பா சபுர் செய்ங்க )
.
.
.
அந்த வரிசையில் நான் அறிமுகப்படுத்தும் என் நண்பன் ஏ.கே.எஸ் எனும் சித்தீக் ..!!!
வாத்தியார் சாருக அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது இவன் முழுப்பெயரை ஏ.கே.செய்யது உமர் சித்தீக் கான் சொல்லி முடிச்சிட்டு ஒரு சொம்பு நெறைய தண்ணி குடிச்சாத்தேன் பாடம் நடத்த மிடியும்....
.
.
.
எனக்கு 10 நாள் பிந்தி பிறந்ததால் என்னை "டே ! அண்ணே ( பக்கி அதுக்கு டேன்னே கூப்புடலாம் ) அப்டின்டு கூப்புடுவியான்...முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட நல்லா படிக்கிற நாலு பேருல அவனும் ஒருத்தய்ன்...
.
.
.
எங்க ரெண்டு பேத்தையும் தண்ணிய தொளிச்சி நேந்து உட்ருவாக...நாங்க ஊர்காட்ட சுத்துனது போக ,கம்மாக்கரைல கவ்வக்குடுத்தது போக , பள்ளியாச தோப்புல நொட்டுனது போக , மகமாயி தேட்டருக்கு போனது போக இம்புட்டிக்காண்டு படிப்போம்...
.
.
.
எங்க ரெண்டு பேர்ல ஒருத்தய்ன் ஒரு சைடு மட்டும் கைலிய தூக்கிட்டு எங்குட்டாச்சும் நடந்துபோனாலே அம்ம பெருசுக " ரைட்டு செய்த்தாய்ன் செல்லங்குஞ்ச போவுது அப்புடிம்பாவ....அப்ப ரெண்டு பேரும் ஒண்ணாப்போனா ???? ...ஆமாம் மகமாயி தேட்டர்ல நானும் அவனும் சும்மக்காச்சும் ஒரு மிக்கியமான ஆளுட்ட 15 ஐ 2 ஆல வகுத்துட்டு பகுமானமா பருப்பு சோறு தின்டுட்டு இருந்தோம்..அந்த ஆளு சித்தீக் அத்தா காதுல போட்ருச்சு...அவரு என்னய கூப்புட்டு கேட்டாரு...அதுக்கு நான் என்ன செஞ்சேய்ன்....அப்டின்டேன்...அவரு சித்தீக்க பெல்ட்ட எடுத்து பெண்ட நிமித்திட்டாரு...அப்ப அவய்ன் என்னய பாத்தான்...நான் புதுப்பொண்ணு மாறி குனிஞ்சிக்கிட்டேன்...
.
.
.
சித்தீக்கும் , மாப்புள சமாலும் ஒரே மாதிரி இரிப்பாய்ங்கே...அவய்ங்கள அண்ணன் தம்பியான்டு அம்புட்டு பேரும் கேப்பாக...அதுல ஒரு காமெடி சித்திக் தப்பு பண்ணுனா சமாலு வீட்டுலயும் சமாலு தப்பு செஞ்சா சித்தீக்கு ஊட்டுலயும் டின்ன கட்டுவாக...போட்டுக் குடுக்குற பார்ட்டிக்கு எவய்ன்டு அடையாளம் தெரியாது..அதேய்ன் காரணம்...
.
.
.
எல்லாரும் வழக்கமா இளையராஜா பாட்டுக்கள் , எம்.எஸ்.வி பாட்டுக்கள் கேசட்டில் பதிந்து கேட்போம்..ஆனா இந்த சித்திக்கு பய மகமாயி தேட்டர்ல வரும் கொல்ட்டி படங்களில் ( டப்பிங்க் படங்கள் ) உள்ள பாட்டை பதியனும்னு அடம் புடிச்சு பதிந்து கேட்பான் (ஒரு பய கேசட்ட ஓசி கேக்க மாட்டியான் )..
.
.
.
அப்ப நாங்க எளந்தாரிப் பயபுள்ளயா இருக்கும் போது காமிக்ஸ் புக்குகள் ( அம்புலி மாமா மாதிரி ) அபிராமத்துல பழைய ஞானம் சைக்கிள் கடைக்கி எதுக்க உள்ள வீட்டு நண்பன்ட்ட வாடகைக்கி ( காமிக்ஸ் புக்க வாடகைக்கி உட்ட ஒரே கரகாட்ட கோஷ்ட்டி அம்மதேய்ன் ) வாங்கி ஏழெட்டு நாள் வாடகை குடுக்காம , குடுத்தவன கிறுக்கோல் அடிச்சு புக்க மட்டும் குடுறான்டு அவய்ன் கேக்கும்போது திரும்ப குடுப்பம்...
.
.
.
நான் டீச்சர் ட்ரெய்னிங்கு மொத மொத படிக்கும்போது ( ரெண்டு எடத்துல படிச்ச கரகாட்ட கோஷ்ட்டியும் அம்மதேன்..அம்மள ஆரும் செவிக்க மிடியாதுல்ல ) கொடுமலூர்ல இங்குலிபீசுல சித்தீக்க பத்தி ரெண்டு வரி எழுதி (Oh my dear friend siddique !! see in my heart you sit thick !!) என் ஆசிரியர் உதய சங்கர் அவர்களிடம் காட்டினேன்...சூப்பர்டா...தங்கம் பொன்னு விக்கிறவரு மயனுக்கு இம்புட்டு அறிவான்டு பாராட்டினார்...அதே பொஸ்தவத்த சித்தீக்குட்ட காட்டுனேய்ன்...அத படிச்சுட்டு அவன் என்ட்ட " அதுக்கு என்ன இப்பம்..." அப்டின்டு கேட்டாய்ன் யாத்தர்வியான்....கோவத்துல அன்னக்கி அவனுக்கு ஒட்டுப்பீடி நான் பெறக்கி குடுக்கலைல... ,
.
.
.
இப்படி என்னுள் அவனும் அவனுள் நானும் நிறைந்து , பிணைந்து , கலந்து இருக்கும் நட்பு இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது...காலச்சக்கரம் சுழன்று கொண்டும் இருக்கிறது.....
.
.
.
நீதி : டே மூத்தவளே...நீ நல்லா இருக்கனும்டா ( கலங்கிய கண்ணீர் துளிகளுடன் )
அனைவருக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்...
அ.ப.சாகுல் ஹமீது....

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive