சங்கத்து பிள்ளைகள்

MUSLIM WELFARE ASSOCIATION
முஸ்லீம் பொது நல ஊழியர் மன்றம் என்ற மாபெரும் அமைப்பை நமது முன்னோர்
உருவாக்கினர். அதன் முக்கிய பணியாக ரமலான் இரவுகளில் ஷஹர் நேரத்தில்
நத்தம் வீதிகளில் பைத் ஓதி மக்களை விழித்தெழ வைப்பது,கல்யாணம் நடைபெறும்
போது மாப்பிள்ளையை பைத் ஓதி மணப் பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்வது,ஊரில்
நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதனைச் சிறப்பித்தல்
போன்றவை ஆகும். பாரம்பரியம் மிக்க இம்மன்றத்தின் அனுபவங்களை மற்ற
வாரங்களில் பார்ப்போம்!........

MUSLIM WELFARE ASSOCIATION
சங்கத்து பிள்ளைகள்

சங்கத்துப் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை வீட்டில் பெருத்த வரவேற்பு
இருக்கும்.சங்கத்து புள்ளைக வந்துட்டாகளா? சங்கத்து மாலை ஏறினா
தான் மத்த மாலை ஏறனும் என்று ஏகத்துக்கு மரியாதைதான்.
மாப்பிள்ளை சோவடிப்பு,பைத் பாடி பொண்ணு வீட்டுக்கு அழைத்து
வருவது பொண் வீட்டில் பத்து நிமிசம் சோபனப்பாடல் பாடுதல்
என சோர்வான புள்ளைகளுக்கு அடுத்த நாள் செம்ம அதிர்ஷ்டம்.
ஆம்! மாப்பிள்ளை சாப்பாடு.

வசதிக்கேற்ப மாப்பிள்ளைத் தோழர்களை 11, 21 31, 41, 51,
என அழைத்து மாப்பிள்ளையுடன் சேர்த்து அளிக்கப்படும் விருந்து!
காலையில் இடியாப்பம் , புரோட்டா , இட்டிலி , ஆமை வடை ,
உளுந்த வடை , கறி சம்சா,கறி சால்னா, ஈரல் பெரட்டல் என
அமர்க்களப்படும்.அப்போது ஒரு மாப்பிள்ளைத் தோழர் கேட்பார்
பழைய கஞ்சி இருக்கா?ன்னு கல்யாண வீட்டுல பழைய கஞ்சிக்கு
எங்கே போறது?. பக்கத்து வீட்டு பாத்துமக்காவிடம் ரெண்டு
பொரட்டாவ குடுத்துட்டு பழைய கஞ்சி வாங்கிட்டு வந்து வைப்பார்கள்!
ஆனால் கேட்ட கஞ்சிய பொட்டு வுடாம குடிச்சு ஆகணும்!
அடுத்து வித விதமா வெளிநாட்டு சிகிரெட்டு தட்டில் வரும்! நம்ம
சுல்தான் காதருக்கு சுருட்டுக் குடித்தா தான் செமிக்கும்! பின்ன என்ன
பக்கீர் அப்பா கடைக்கு ஓடிப்போயி வாங்கி கொடுக்கணும்!
காலைல நல்லா புள்ளைக சாப்புட்டிருச்சுக
மதியம் என்னஎடுபடப் போகுதுன்னு பொண்ணு வீட்டுக்காரவுக
தப்புக் கணக்கு போட்டா மத்தியானம் மாப்புள்ளைய தவிர மத்த
எல்லா எஞ்சினும் புதுசு! அப்புறம் என்ன மதியச் சாப்பாடு சாப்பிட்டு
முடிச்சதும் அஸருக்கு பாங்கு சொல்லிருவாக!
21 பேருக்கு மாப்புள்ளச் சாப்பாடு போடுற
செலவும், முதல் நாள் கல்யாணச் சாப்பாடுக்கு ஆகுற செலவும்
ஒன்னுன்னு நம்ம கணிதப் புலி கலீல் சொல்றார்னா பாத்துக்குங்க!

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

Tamilnadu Results