கொடைக்கானல் மாலிக் அண்ணன்


கொடைக்கானல் மாலிக் அண்ணன்

நான் கொடைக்கானல் சுற்றுலா என் மச்சான் கிப்ஸ் சிக்கந்தர் அஹமது அவர்கள் குடும்பத்துடன்
சென்றேன்.அங்கு நான் பார்த்த அழகிய இயற்கை ஜாலங்கள் ஆஹா அற்புதம் !!! காணும் இடமெங்கும் பச்சைப் போர்வை உடுத்திய இயற்கை கன்னி கொடைக்கானலின் பொலிவு என்னை வியக்க வைத்தது.சல சலக்கும் அருவியின் ஓசை என் மனத்தின் சோர்வை குணப்படுத்தும் மருந்தாக இருந்தது.பசுமை மரங்களின் இனிமை கண்டு என் கண்கள்
கனவில் மிதந்தது பகலிலும் கூட!!
இவற்றை எல்லாம் மிஞ்சும் ஒரு நிகழ்வு தான்
நான் மாலிக் அண்ணனைச் சந்தித்தது. ஆஹா என்ன அருமையான மனிதர்.
நட்புக்கு இலக்கணமாக என் வாழ்க்கையில் அவரைத்தான் சொல்வேன்.
காரணம்

அவரது பால்ய வயது நட்பு முதல் வாலிப வயது நட்பு வரை அனைத்து நண்பர்களையும் இன்றும் சந்தித்து உறவாடி மகிழ்வதுதான்.உண்மையில் தம்பா எனச்செல்லமாக அழைக்கப்படும் எனது உறவினர் முகமது தம்பி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் அவரல்லவா எனக்கு இந்த மாசற்ற மாமனிதரை அறிமுகம் செய்து வைத்தார்.அலுவலகச்சுமையை ஒரு கையிலும் நட்புப் பூக்களை மறு கையிலும் சுமந்து கொண்டு ஆனந்த வாழ்வு
வாழும் அண்ணா உங்களைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லித்தாருங்கள். மனத்தில் துணிவும், பார்வையில்
கனிவும், உதவுவதில் பரிவும் உங்களுக்கு மட்டுமே சொந்தம். மனித இதயங்களை
கவர்ந்த உங்கள் மனம் ஐந்தறிவு ஜீவன்களையும் விட்டுவைக்க வில்லையே! சுந்தரி என்று ஒரு பசு மாட்டைப்பரிவுடன் கொஞ்சுவதும் ஸ்பைக் என்று ஒரு பூனையுடன் பேசுவதும் அண்ணா ! மாலிக் அண்ணா ! ஏன் இப்படி!!நல்ல வேலை நான் இரண்டு நாள் தான் அவருடன் இருந்தேன். இருந்திருந்தால் புழு பூச்சிகளுக்கும் அவர் வைத்த பெயர்களை மனனம் செய்யத் திண்டாடி இருப்பேன்.
இறைவா! நன்றி ! இவரை எனக்கு நண்பராய் தந்ததற்கு!

மேலே உள்ள புகைப்படத்தில் வலப்புறம் மாலிக் அண்ணன் மற்றும் இடப்புறத்தில் தம்பா என்ற முகமது தம்பி ஆகியோர் உள்ளனர்.

தொப்புள்
கொடி உறவுகள் அறுந்தாலும்
நட்புக்கொடி நம்மை என்றும் காக்கும் !!


என்றும் அன்புடன்

உங்கள் தம்பி சாகுல் ஹமீது.

0 comments:

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

Tamilnadu Results