அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?


-->

வீட்டுக்கு செல்வம் மாடு , தோட்டச் செல்வம் முருங்கை.
அறைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி , ஆயிரம் பொன்னை அறைக்காசு ஆக்கு கிறவளும் பெண்சாதி.
கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்.
உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ?
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
அள்ளாது குறையாது , சொல்லாது பிறவாது .
தாய் முகம் காணாத பிள்ளையும் , மழை முகம் காணாத பயிரும் உருபடாது.
நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும் , கேட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
வானம் சுரக்க , தானம் சிறக்கும் .
நாவு அசைய , நாடு அசையும் .
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும். அறிய அறியக் கெடுவார் உண்டா? அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம். அறிவீன இடத்தில் புத்தி கேளாதே. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம். அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை. அறிவுடையாரை அரசனும் விரும்புவான். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும். அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா? அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆழமறியாமல் காலை இடாதே. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு. ஆறின கஞ்சி பழங் கஞ்சி. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன். ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம். ஆனைக்கும் அடிசறுக்கும். அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடக்கமே பெண்ணுக்கு அழகு. அடாது செய்தவன் படாது படுவான். அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. அந்தி மழை அழுதாலும் விடாது. அப்பன் அருமை மாண்டால் தெரியும். அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம். அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர். அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. அழுத பிள்ளை பால் குடிக்கும். அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும். அளக்கிற நாழி அகவிலை அறியுமா? அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை. அறச் செட்டு முழு நட்டம். அற்ப அறிவு அல்லற் கிடம். அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான். அறமுறுக்கினால் அற்றும் போகும்.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
சுக துக்கம் சுழல் சக்கரம்.
செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்
சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

0 comments:

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

Tamilnadu Results