பேட்டை அண்ணன் மற்றும் லொள்ளு மாமு

MUSLIM WELFARE ASSOCIATION NATHAM


அன்று காக்கி ட்ரவுசரை உடுத்திக் கொண்டு அல்லது
கைலியை கையில் பிடித்துக் கொண்டு(கட்டக்கூடாது)
கல்மண்டபத்திற்கு வந்தால் அங்கு பேட்டை அண்ணன்
ரெடியாக இருப்பார்.அவரிடம் 6 வயசு பொடுசு ' என்ன
மம்மது மைதீன் சாப்ட்டயா? என்று கேட்கும்'
உடனே அவர் எவய்ன் அவய்ன் புத்தி இருக்கா மதி
இருக்கா? என்பார்.நாமெல்லாம் சின்ன கிளாசில் டீ
குடிப்போம் ஆனால் பேட்டை அண்ணன் பெரிய
சட்டியில் தான் டீ குடிப்பார்.அவருக்கு ஞாயிறு முதல்
சனி வரை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சோறு வரும்.
அதை லுஹரில் ஆரம்பித்து அஸர் வரை சாப்பிடுவார்.
அடுத்து அடுத்தநாள் டீதான்.
அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்

எந்த மடப்பய? , பேதில்ல போயிருவ, கொல்லையில போயிருவ,
அரிசிப்பல்லு அவுசாரி, தெத்துப்பல்லு தே.........யா, லொங்காரிச்
சிருக்கி மயன், குச்சிக்காலி மயன், குல்லி மயன், சமுக்காரம்(சோப்பு)
மடார்னு உளுந்திருவ, திடீர்னு உளுந்திருவ, ஞாயத்துக் கெளம
ஒன்னு மைதினாண்டவுகளே நீங்க கேளுங்க, கடைசியா
முடியாத பட்சத்தில அவர் "கொல்றான்" "கொல்றான்" என்று
மூச்சு விடாமல் கத்துவார்.
உடனே அவரை விட்டு விலகிய குழு லொள்ளு
மாமுவிடம் 'வெள்ளக்கோழி வெள்ளமுட்ட விட்டா கருப்புக் கோழி
என்ன முட்ட விடும்?னு அறிவியல்பூர்வமான கேள்விய கேட்கும்.
அதற்கு அவர் நொப்பன் முட்ட விடும் என்பார்.
இவை அன்றைய கோணத்தில் சிரிப்பாக
இருந்தாலும் இன்று நினைத்தால் மனம் கனக்கிறது.அவர்களிடம்
வாங்கிய திட்டுக்களுக்கு பிரயாச்சித்தமாக ஏதாவது செய்ய
வேண்டும் என்று நாம் நினைத்தால் அவர்களுடைய மறுமைக்கு துவா
செய்வோம்!!
MUSLIM WELFARE ASSOCIATION

1 comments:

NewZulfi said...

Good narration..You brought pattai before me.U had noted lots of his activities.I enjoy reading your article..

Google Search

Popular Posts

About Me

My photo
ABIRAMAM, TAMILNADU, India
WORKING AS A SECONDARY GRADE TEACHER IN KAMUTHI UNION

current time

Tamilnadu Results